×

பாபநாசம் படித்துறை அருகே அபாய நிலையில் கல்மண்டபம்-விரைவில் அகற்றப்படுமா?

வி.கே. புரம் :  நெல்லை மாவட்டத்தில் புகழ்பெற்ற உலகம்மை சமேத பாபநாச சுவாமி கோயில் உள்ளது. இங்கு நெல்லை மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி சுவாமி அம்பாளை தரிசனம் செய்து செல்வது வழக்கம். இக்கோயில் முன்பாக ஓடும் தாமிரபரணி நதியின் படித்துறை அருகே பல்லாண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட சூரிய மண்டபம் எனப்படும் கல் மண்டபம், முறையான பராமரிப்பின்றி சேதமடைந்து வந்தது. மருந்துக்குக்கூட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாத இந்த மண்டபம் தற்போது எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. ஆனால், இதை அறியாத பக்தர்கள் தாமிரபரணி நதியில்  குளித்துவிட்டு கல் மண்டபத்தில் தங்கள் துணிகளை காய வைப்பதையும், சில நேரங்களில் இந்த மண்டபத்தின் கீழ் பகுதியில் உட்கார்ந்து செல்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். எனவே, மிகப்பெரிய அளவில் அசம்பாவிதம் நிகழும் முன்னர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இங்கு கள ஆய்வு நடத்தி போர்க்கால அடிப்படையில்  சீரமைத்து அருகேயுள்ள படித்துறைகளையும் பாதுகாக்க முன்வருவார்களா? என்ற எதிர்பார்ப்புடன் பக்தர்கள் உள்ளனர். அல்லது இடியும் நிலையில் உள்ள இந்த கல் மண்டபத்தை உடைத்து எடுத்து அகற்ற வேண்டும் என சமூகநல ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இங்குள்ள தாமிரபரணி  ஆற்றின் அருகே படித்துறைகளை முறையாக பாதுகாக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை  கிளை நீதிபதிகள் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது….

The post பாபநாசம் படித்துறை அருகே அபாய நிலையில் கல்மண்டபம்-விரைவில் அகற்றப்படுமா? appeared first on Dinakaran.

Tags : Patitura ,Papanasam ,VK Puram ,Nellai district ,Ulagamai Sametha Babanasa Swamy Temple ,Papanasam Padithura ,
× RELATED விருப்பாச்சிபுரம் கடைவீதி பகுதியில்...